பருவக் காலங்கள் ( Part 2) (தொடர்ச்சி) | அறிவியல்


1️⃣ கோடைக் காலம். 

இக்காலப் பகுதியில் வெப்பம் அதிகம். தானியங்கள் நன்றாக வளர்ச்சியடையும். நீண்ட பகலும் குறுகிய இரவும் காணப்படும். ஜுன் (June ) 21ம் திகதி வட அரைக்கோளத்திலும் டிசம்பர் (December) 22ம் திகதி தென்னரைக் கோளத்திலும் "கோடைக் காலம்" ஆரம்பமாகும். 

2️⃣ இலையுதிர் காலம். 

இக்காலத்தில் வெப்பமானது படிப்படியாக குறைவடையும். இப் பருவக்காலம் ஆரம்பமாகும் போது மரங்களின் இலைகள் கீழே விழ ஆரம்பிக்கும். இப் பருவத்தில் சமவிராக் காலம் உருவாகும். சூழலானது வரண்டதாகக் காணப்படும். செப்டம்பர் (September) 23ம் திகதி வட அரைக்கோளத்திலும் மார்ச் (March) 21ம் திகதி தென் அரைக்கோளத்திலும் " இலையுதிர் காலம்" ஆரம்பமாகும்.

3️⃣ மாரிக் காலம். 

இக்காலப் பகுதியில் வெப்பநிலைக் குறைவாகக் காணப்படும். அதிக குளிர் நிலவும். சூழல் முழுவதும் பனியால் மூடப்பட்டு வெண்மையாகக் காட்சி தரும். டிசம்பர் (December) 22ம் திகதி வட அரைக்கோளத்திலும் ஜுன் (June) 21ம் திகதி தென்னரைக் கோளத்திலும் "மாரிக் காலம்"  ஆரம்பமாகும். 

4️⃣ இளவேனில் காலம். 

இக்காலத்தில் வெப்பமானது படிப்படியாக அதிகரிக்கும். இப் பருவக்காலம் ஆரம்பமாகும் போது மரங்களில் தளிர்கள் மற்றும் பூக்கள் என்பன தோன்ற ஆரம்பிக்கும். மார்ச் (March) 21ம் திகதி வட அரைக்கோளத்திலும் செப்டம்பர் (September) 23ம் திகதி தென் அரைக்கோளத்திலும் " இளவேனில் காலம்" ஆரம்பமாகும்.


 

Comments