கிராம ஆதார மையங்கள் (விண்வெளி ஆராய்ச்சிகள்)
கிராம ஆதார மையங்களை இந்த செயற்கைக் கோள்கள் மூலம் இணைக்கும் ஒரு மாதிரி திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதன்படி தரை மட்டத்தில் உள்ள அனைத்து நீர், நில வளங்கள் மற்ற தகவல்கள் செயற்கைக் கோள் மூலம் ஆராயப்பட்டு கணிணிகள் மூலம் அளிக்கப்படுகிறது. இதனால், திட்டமிடுதல் மேம்படுகிறது. விவசாய நிபுணர்களோடும், வருவாய் அதிகாரிகளோடும் இணைப்பு ஏற்படுத்தப்படுவதால் பலவகையான பொருட்களையும், சேவைகளையும் வழங்குபவர்கள் சிறப்பாக வியாபாரம் செய்ய முடிகிறது. இது அல்லாமல், இந்த மையம் தொலை தொடர்பு மருத்துவ சேவைகளையும், தொலைத் தொடர்புக் கல்வியையும் அளிக்கக்கூடிய வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
21 மாநிலங் களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 475 கிராம ஆதார மையங்களில் ஒரு சாளர முறை மூலம் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது. தற்போது, ஒரு இடத்திற்கு போகும் வழியை கண்டுபிடிக்கும் GPS முறையை பயன்படுத்த நாம் அமெரிக்காவை நம்பியிருக்கிறோம். இதனை சரிசெய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தானே ஒரு IRNS எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் ஒரு இடத்திற்கு செல்லும் பாதையை அறியும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்கு பூமியின்மீது ஒரே இடத்தில் நிலையாக நிற்கும் ஏழு செயற்கைக் கோள்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. இந்த செயற்கைக் கோள்கள் மூலம் பாதுகாப்புத்துறையும் தன்னுடைய அன்றாட பணிகளை செய்ய ஏதுவாகும். இன்சாட் செயற்கைக் கோள்கள் மூலம் கடலில் ஆபத்தில் இருக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்களிலிருந்து அவசர செய்தியை அனுப்பி தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட முடியும்.
செயற்கைக் கோள்களின் தகவல்களோடு தரையில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வானிலை ஆய்வு நிலையங்களின் தகவல்களும் பயன்படுத்தப்படு கின்றன. பூமியின் மீது ஒரே இடத்தில் நிலையாக நிற்கும் செயற்கை கோள்களிலிருந்து பூமியின் தரை உஷ்ண அளவு, காற்றின் திசை, வேகம், ஈரப்பதம், கதிர் சிதறல் மற்றும் பூமியின் ஈரம் ஆகியவை நேரடியாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த செயற்கைக் கோள்களின் மூலம் தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்கள் மற்றும் பங்கு மார்க்கெட்டுகள் தடையில்லாமல் செயல்படுகின்றன. சாமானிய மக்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நம்முடைய பிரபஞ்சத்தைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை அளிக்க மறக்கவில்லை. அதனால்தான் நாம், நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் பயணம் முடிந்தது. சந்திராயண் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம் நமக்குசெய்ய மிக அரிய தகவல்களை அளித்துள்ளன. இதன்படி, நிலவில், நீர் இருப்பதை முதலாக அறியமுடிந்தது. அதைப்போலவே, அங்கு அதிக அளவில் ஹீலியம் படிமங்கள் இருப்பதும் முக்கியமான கண்டுபிடிப்புகளாகும். விண் வெளி தொழில்நுட்பத்தால் ஏற்படும் பலன்கள் பலவகையானவை. விண்வெளி தொழில் நுட்பத்தால் நோய்க்கான அறிகுறிகளை கண்டுபிடித்தல், கணித்தல், சிக்கலான மூலக் கூறுகளின் தன்மைகள் ஆகியவை கண்டறியப் பட்டுள்ளன. மருத்துவத் துறையில் இந்திய கண்டுபிடிப்புகளான இதய வால்வுகள், இதயம் செயல்படும் பம்புகள், ஸ்டென்டுகள் மற்றும் போலியோ பாதித்தவர்களுக்கு இடுக்கிமானி, ஆகிய கண்டுபிடிப்புகளை உதாரணமாகக் கூறலாம். ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களுக்கான சிக்கலான தொழில்நுட்பங்களை உருவாக்கி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் Dr சாராபாயின் கனவை நனவாக்கியுள்ளது. சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளது.
விண்வெளி ஆய்வுக்கு செய்யப்பட்ட செலவைவிட அதனால் விளைந்துள்ள பயன்கள் மிக அதிகம் என்று ஒரு தனி ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா ஒரு முன்னோடி நாடாக விளங்குகிறது ஆதாரம் : திட்டம் மாத இதழ் ஆக்கம் : மாதவன் நாயர், முன்னாள் தலைவர், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்.
Comments
Post a Comment