பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியமும் தத்துவமும் பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவும், சாசனங்கள் (records) பதியவும் பயன்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் ஆகும்.
கா. சிவத்தம்பி என்பவர் கட்டுரை (About this sound ஒலிப்பு ) "பகுப்பாய்வுக்கான (analysis) ஒரு வடிவம்" என்றும், "விவாதித்து விபரிப்பதே" அதன் பண்பு என்றும் குறிப்பிடுகின்றார். (க.சொக்கலிங்கம்) என்பவர் "ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை" என்கிறார். இவர்கள் கருத்துக்கேற்பவே கட்டுரை தர்க்க வெளிப்பாட்டிற்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் உரிய வடிவமாக இன்று பயன்படுகின்றது.
கட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பந்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை என்று க. சொக்கலிங்கம் "கட்டுரை கோவை" என்ற நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் "தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராகக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பாற் பொருளை சுட்டுதல்" (வி. செல்வநாயகம்) போன்ற பண்புகள் பேணப்பட வேண்டும்.
கட்டுரை வகைகள்
கட்டுரைகளை நடை மற்றும் நோக்கம் ரீதியாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- தர்க்கக் கட்டுரை (Argumentative Essay)
- செய்திக் கட்டுரை (Article)
- விவரணக் கட்டுரை (Descriptive Essay)
- பகுத்தாய்வுக் கட்டுரை (Analytical Essay)
- செயல்முறை விளக்கக் கட்டுரை (Process Analysis Essay)
- ஒத்தன்மை விளக்கக் கட்டுரை (Analogy Based Essay)
- எடுத்துரைத்தல் கட்டுரை (Narrative Essay)
- வகைப்படுத்தல் கட்டுரை (Classification Essay)
- ஒப்பீட்டு கட்டுரை (Comparison and Contrast Essay)
- புனைவுக் கட்டுரை (fictional essay)
கட்டுரையின் நடை
கா. சிவத்தம்பி "நடை" பின்வரும் கூறுகளால் நிர்ணயிக்கப்படுகின்றது என்கிறார்.
- சொல் தெரிவு
- சொல்லும் திறன், உத்தி
- அணிகள் (சொல் அணிகள்)
- வாக்கியங்கள் அளவு, அமைவு முறைமை
பேச்சு தமிழ் நடை எதிர் கட்டுரைத் தமிழ் நடை
பிரதேச தமிழ் நடை எதிர் கட்டுரைத் தமிழ் நடை
இலக்கிய வடிவங்கள்
- கதை
- சிறுகதை
- தொடர்கதை
- புதினம்
- காப்பியம்
- நாடகம்
- பாட்டு
- கவிதை
- உரைவீச்சு
- உரைநடை
- கட்டுரை
- உரையாடல்
- நனவோடை
- இதிகாசம்
Comments
Post a Comment