பருவக் காலங்கள் (Part 1) | அறிவியல்

 பூமி சூரியனைச் சுற்றி வருவதனாலும் , புவியொழுங்கின் புவியச்சின் சாய்வினாலும் பூமியில் பருவக்காலங்கள் ஏற்படுகின்றன. மத்திய கோட்டுப் பிரதேசங்களில் பருவக்காலங்களைத் தெளிவாகக் காண முடியாது. ஆனால் இடை உயர் அகலாங்குப் பிரதேசங்களில் பருவகால வேறுபாடுகளை முனைப்பாகக் காணலாம். பருவக்கால வேறுபாடுகளானது தாவரங்களிலும் மக்களின் வாழ்க்கை முறைகளிலும் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன.



🌀 பயிர்ச் செய்கை - பருவக்காலங்களுக்கு ஏற்ப வேறுபடும். 

🌀 ஆடை - கோடைக் காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் "பருத்தி"  ஆடைகளையும் , குளிர்க் காலத்தில் குளிரைத் தாக்குப்பிடிக்க "கம்பளி"  ஆடைகளையும் பயன்படுத்துவர். 

🌀 விளையாட்டு - கோடைக் காலத்தில் "மென்பந்தும்" குளிர் காலத்தில் "பனிச்சறுக்கலும்" விளையாடுகின்றனர். பிரதானமாக உலகில் 4 வகையான பருவகாலங்கள் காணப்படுகின்றன.

♦️ கோடைக் காலம்.

♦️ மாரிக் காலம்.

♦️ இலையுதிர் காலம்.

♦️ இளவேனில் காலம்.

Comments