பொஸ்னிய யுத்தத்தின்போது 50 ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டனர் என்று கணிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் வல்லுறவு போர் குற்றங்களுக்காக 30 விசாரணைகள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றது. 1990 களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொஸ்னியா சியாராலியோனில் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டுள்ளனர்.
சேர்பிய கிறிஸ்தவ இராணுவம் பொஸ்னிய முஸ்லீம் பெண்களை கருக்கொள்ளும் வரை பாலியல் பலாத்காரம் செய்தது ஒரு மறக்கமுடியாத வரலாறு. ருவாண்டா இனப்படுகொலையில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை லைபீரியாவிலுள்ள பெண்களின் தொகையில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் படைவீரர் அல்லது துணைப் படைக்குழுவைச் சேர்ந்தவர்களினால் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு இலக்காகியிருந்தனர்.
மேற்கூறிய தகவல்கள் என்றோ கற்காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களல்ல! மாறாக மனித நாகரீகம் பிரமிக்கத்தக்க நிலையில் வளர்ந்துள்ளது! என்று கூறுகின்ற மிக அண்மையில் நிகழ்ந்தவை. காஸ்மீர், சிரியா,ஈராக்.... போன்ற யுத்த வலயங்களில் இன்றும் நிகழ்பவை. சில காலங்களுக்கு முன் இலங்கை இனவாத யுத்தத்திலும் இந்திய இராணுவ தலையீட்டிலும் பெண்கள் சந்தித்த அவலங்கள் பற்றிய ஒரு பதிவை வாசித்தேன். அதில் பெண் பெண்மை என்ற சராசரி பார்வைகூட அல்லாமல் அவர்கள் பாலியல் வக்கிரம் கண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர உளவு நடவடிக்கைகள் நடத்தும்போதும் விசாரணைக்கு ஆளாகும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குவதும் சர்வசாதாரணம்.
இதல்லாமல் இராணுவத்தில் இணைந்த பெண்கள் மேலதிகாரிகள் மூலம் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தனிப்பதிவாக எழுதக்கூடிய சோகக்கதைகள்!
.எம்.யூ.ஏ.ரஹீம்
Comments
Post a Comment