வணக்கம் தலைவா! | உரையாடல்

 வெய்யோன் வெப்பம் தணிந்த மாலை நேரம். சூட்டிங் முடித்து வந்த களைப்புடன் சூடாக ஒரு கப் தேநீரை அருந்தியபடி அமர்ந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஃபோன் ஒலிக்கிறது. அழைத்தவர் அனிருத். 



"வணக்கம் தலைவா!"


"வணக்கம் அனிருத்! எப்டி இருக்கீங்க?"


"நல்லா இருக்கேன் தலைவா!"


"அப்புறம் நம்ம படத்தோட மியூசிக் வேர்க்ஸ் எப்டி போய்ட்டிருக்கு?"


"சூப்பரா ஒரு பாட்டு ரெடி தலைவா!"


"வாவ்! பாட்டு பேர் என்ன?"


"சைனா முத்து"


"என்னப்பா இது பேரு?"


"தளபதிக்கு அரபி குத்து போட்டோம், உங்களுக்கும் வேற லெவல்ல ட்ரெண்ட் ஆகுற மாதிரி பாட்டு போடணும்னு...."


"அது சரி! அதென்ன சைனா முத்து! புரியலியே!"


"நீங்க நடிச்ச முத்து ஐப்பான்ல பெரியளவில ஹிட் ஆச்சு, அதே மாதிரி இந்தப் படம் சைனாவில ஹிட் ஆகணும். சைனா பெரிய நாடு என்கிறதால வசூல் சும்மா அள்ளும்." - இது நெல்சன்


"அதுதான் தலைவா சைனா முத்துன்னு வைச்சோம்." - இது அனிருத்


"எல்லாம் சரிப்பா! லிரிக்ஸ் யார் எழுதினது?


"வேற யாரு தலைவா! நம்மாளு தான்!"


"சிவகார்த்திகேயனா?"


"ஆமா தலைவா!"


"சரி பாடிக் காட்டுங்க பாப்போம்!"


*


அங் உங் சிங் கியூட்டி நீ

ஆவோஸ் ஆஞ்சிங் பியூட்டி நீ

மா ஓ சேதுங் சுவீட்டி நீ

கிங் ஒங் உன் சைனா முத்து நீ தானே!

Comments