2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்....
சேரன்மாதேவி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேல்துரையும், அ.தி.மு.க சார்பில் மனோஜ்
பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் வேல்துரை வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தேர்தலின் போது வேல்துரை அரசு ஒப்பந்ததாரராக இருந்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து மனோஜ் பாண்டியன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சேரன்மாதேவி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரையின் வெற்றி செல்லாது என்று
தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பு எப்போது வழங்கப்பட்டது தெரியுமா?
2011 ஏப்ரல் 13-ம் தேதி.
அப்போது அவர் தனது சேரன்மாதேவி எம்ல்ஏ பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்துவிட்டு, அடுத்த தேர்தலுக்காக ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார்.
இந்த வெட்டித் தீர்ப்பினால் என்ன பிரயோசனம்?
ஐந்துநிமிட நேரத்தில் ஆலமரத்துக்கு அடியில் உட்கார்ந்து கொண்டு முடிவெடுக்கிற ஒரு சாதாரண விஷயத்துக்கு, கோர்ட் எடுத்துக் கொண்டது ஐந்து வருடங்கள்.
உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி, உச்சநீதிமன்றத்தில் செல்லுபடி.
ஒரே வழக்குதான், ஒரே சட்டம்தான். ஆனால், கடவுளின் தூதர்களாக வர்ணிக்கப்படுகிற நீதியரசர்களின் கண்ணோட்டம் வேறுவேறுதானே?
இன்று ஒரு தீர்ப்பு. 2019-ல் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும். நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்று 2022-ல் தீர்ப்பு.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல….. பல தீர்ப்புகள்.
நீதிமன்றத் தீர்ப்பை நீங்கள் எப்படி விமர்சிக்கலாம்? என்று புரியாமல் புலம்புகிறவர்களுக்காக மட்டும் இந்தப்பதிவு.
Comments
Post a Comment