மரணம்:
வா மனிதா.
நீ கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது.."
மனிதன்:
"இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?"
மரணம்:
"மன்னித்துவிடு மனிதா . .
உன்னைக் கொண்டு
செல்வதற்கான நேரம் இது.."
மனிதன்:
நான் இரவு , பகலாக உழைத்து
சேர்த்த எனது பொருளாதாரம் . .
மரணம் ;
"நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு ..
மனிதன் ;
"என்னுடைய திறமைகள். .
மரணம் ;
"அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்மந்தப்பட்டது..
மனிதன் ;
"அப்படி என்றால்
என் மனைவி,மக்கள் மற்றும் உற்றார் உறவினர் . .
மரணம் ;
அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்..
மனிதன் ;
எனது உடல்?
மரணம் ;
"அது இந்த மண்ணுக்கு
சொந்தமானது
மனிதன் ;
கண்களில் நீர் வழிய
"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?"
மரணம் ;
நீ வாழ்ந்த
ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..
நீ செய்த தர்மம், பிறருக்கு நன்மை
செய்தது, பிறர் துண்பத்தில் பங்கு
கொண்டது, பிறருக்கு தீங்கு செய்யாமல் இருந்தது , போன்ற
போன்ற நல்ல செயல்கள்,
மற்றும் நீ செய்த பாவ கருமங்கள் ...
இவை மட்டுமே உன்னுடையது...
மற்ற எதையும் இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது..
வாழும் காலம் கொஞ்சமே...
மனிதா நீ மாறிவிடு, உன் மறு உலகத்திற்காக...
Comments
Post a Comment