கோபம் கோபம் கோபம்
கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் அளித்திருந்தார்கள்.
***ஒருவர் கூறினார்-!
நான் பணி புரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை.
நான் ஒன்று சொன்னால் அவர்கள் ஒன்று செய்கிறார்கள் அதனால் உடனே கோபம் வந்து விடுகிறது என்றார்....!
***மற்றொருவர்-!
என்னை யாராவது தவறாகச் சொன்னால் சட்டுனு கோபம் வந்து விடுகிறது என்றார்..!
***அடுத்தவர்-!
நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டா கோபம் வந்து விடும் என்றார்..!
***இன்னொருவர்-!
சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னா கோபம் வந்து விடும் என்றார்.
***வேறொருவர்-!
நினைச்சது கிடைக்கலனா,நேரத்திற்கு உணவு,தண்ணி கிடைக்கலனா கோபம் வந்து விடும் என்றார்....!
இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர்.
இப்படியே அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் வருகிறதாம்.
அது சரி...நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா..? என்றதுக்கு..!
அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றார்கள்.
எவ்வளவு கோபம் வந்தாலும் வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்
அடிகளை விட அது தரும் வலிகள் அதிகம்.
பிறகு எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் அந்தக் காயம் ஆறாது.
கோபம் என்றால் என்ன...?
கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறிய,பெரிய தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனைக்குப் பெயர் தான் '''கோபம்'''
அதுமட்டுமல்லாமல் நாம் நமது கோபத்தைக் குறைக்க அடுத்தவர்களிடம் காட்டி செயல்படுவோம்.இதன் காரணமாக...
நட்பு நசுங்கி விடும்,
உறவு அறுந்து போகும்,
உரிமை ஊஞ்சலாடும்
நமக்கு நாமே கொடுக்கும் தண்டனை என்ன...?
சவுக்கு எடுத்து சுளீர்..சுளீர்னு நம்மளையே அடித்துக் கொண்டால் மட்டும் அதற்குப் பெயர் தண்டனை இல்லைங்க.
கோபம் ஏற்பட்டால்...
பதட்டம் ( TENSION ) உண்டாகிறது இதனால் நமது உடல்,மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது.இந்தப் பாதிப்பால்....! நரம்புத் தளர்ச்சி,
இரத்த அழுத்தம்,
மன உளைச்சல்,
நடுக்கம்,
போன்ற உபாதைகள் உண்டாகிறது.
இதனைத் தடுக்க வைத்தியரிடம் சென்று மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவோம்.
இதே நிலை நீடித்தால் ஒரு மனநோயாளி போல் ஆகி விடுவோம்.
இது பொய் அல்ல சத்தியமான உண்மை.
அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடு தான் கோபம்.
முதல்ல அடுத்தவர்களுக்கு கோபம் வருகின்ற மாதிரி நீங்க நடக்காதீங்க.
அடுத்தவர்களை குறை சொல்லாதீங்க,
முடிந்தவரை அடுத்தவர்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்
அடுத்தவர்கள் உங்க மேல கோபப்பட்டா முதல்ல ஈகோ பார்க்காம மன்னிப்புக் கேட்டு விடுங்கள்.
யாராவது உங்களை புறக்கணித்தாலோ அவமானப்படுத்தினாலோ உங்களை மதிக்காமல் விட்டாலோ
நீங்கள் கோபப்பட்டு உங்கள் உடலைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்
அவர்களை அப்படியே அவர்கள் போக்கில் விட்டு விடுங்கள்.
நீங்க கோபப்படும்படி யாராவது நடந்து கொள்கிறார்கள் என்றால்
தயவுசெய்து என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்க என்று சொல்லி அமைதியா போய் யார் மேல் தவறு என்பதை சிந்தியுங்கள்.
கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்.
அப்படி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து தனியா உட்கார்ந்து யோசிங்க.
அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்க.
அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.
அடுத்தவர்கள் என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுகிறோம்.
என்ன நடந்து விட்டது பெருசா,
எதை இழந்து விட்டோம்,
மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு.
அதனைத் தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது.
எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்று முடிவுக்கு வாங்க.
வீட்டுப் பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள்
என்னத்த பெருசா சாதிச்சு கிழிச்சன்னு..
நாட்காட்டியில் உள்ள தேதியை மட்டும் கிழிச்சா போதாது
ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க.
அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம் என்கின்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே இருந்தாலே நீங்க அவர்களுக்கு நல்லது செய்த மாதிரி தான்.
தூக்கு மாட்டி தற்கொலை செய்யப் போகின்றவன் கூட ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக் கொள்வான்.
மிருகங்களை விட ஒரு அறிவு அதிகமாகவே
நமக்க ஆறு அறிவை இறைவன் தந்து இருக்கிறான்.
அந்த ஆறாவது அறிவை அப்பப்ப யோசிப்பதற்கு உபயோகப்படுத்துங்க.
கோபம் வரவே வராது.
நாமெல்லாம் சாதிக்கப் பிறந்தவர்கள்
கோபப்படாமல் இருப்பதே பெரிய சாதனை தான்.
இந்த பூமியில் வாழ்வது ஒரு முறை தான் அதைக் கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்
கோபம் வராமல் இருக்க யோசிப்போம்....!
◇•••••••••••••••••••••••••••••◇
📲 *பதிவிட, மேலதிக விபரங்களுக்கு*
*0777516918*
💁♂️ *இக் குழுமத்தில் இணைந்துகொள்ள* *________________________*
GROUP 1
https://chat.whatsapp.com/IrKy5t8BqPd0NWHzCF3RuK
GROUP 2
https://chat.whatsapp.com/DKNKJiZrVVDJNWykcqMT69
Comments
Post a Comment