மருத்துவர்களே விளம்பரங்களில் தோன்றி சிகரெட்டில் கெடுதல் இல்லை என்று சொன்ன போதும்…..
அந்தக் கால கட்டத்தில் நுரையீரல் புற்றுநோய் விகிதங்கள் மிகப் பெரும் அளவில் பெருகவும், சிகரெட் கம்பனிகளின் தடுமாறத் தொடங்கின.. மக்களிடம் வாதாடுவதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளை லாபி செய்யத் தொடங்கினார்கள். அப்போதும் சரி, இப்போதும் சரி, எந்த விஷயத்தையும் எளிதாக அமுக்கிப்போட இருக்கிற கடைசி வழி அதுதானே.
1960-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கென்னடியிடம் "சிகரெட்டால் புற்றுநோய் வருமா?" எனக் கேட்கப்பட்டது. புகையிலை விவசாயிகளின் ஓட்டு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பினார் கென்னடி.
ஆனாலும் அதையும் தாண்டி விதி வேறு விதமாக விளையாடியது. உலகின் மற்ற நாடுகளின் ஆய்வு முடிவுகளோ அமெரிக்காவின் கருத்துக்கு எதிராக வெளிவந்தன. பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமாகப் புகையிலையால் புற்றுநோய் வரும் என அறிவித்தது.
இந்த எதிர் அலையின் விளைவாக, வேறு வழியின்றி அமெரிக்க சர்ஜன் ஜெனெரலும் 1964-ல் "புகையிலையால் புற்றுநோய் வரும்" என அறிவித்தார். அதன்பின் வேறு வழியின்றி அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் அதை வழிமொழிந்தது. அதன்பின் புகையிலை பிடிக்கும் வழக்கம், கணிசமாகக் குறையத் தொடங்கியது. நாஜி ஜெர்மனியில் நிகழ்ந்தது போல் விமானங்களிலும் பொது இடங்களிலும் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும்…. ஆணானப்பட்ட சிகரெட் கம்பெனிகள் சும்மா இருக்குமா? அடுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்தன.
சிகரெட்டால் வேண்டுமானால் கொஞ்சம் கெடுதல் இருக்கலாம். ஆனால் "பில்டர் சிகரெட்டால் கெடுதல் இல்லை" எனச் சொல்லிக்கொண்டு புதிதாக பில்டர் சிகரெட்டுகளை வெளியிட்டன.
இது என்னடா புதுச் சிக்கல் என்று புகையில எதிர்ப்பாளர்கள் கொஞ்சம் தடுமாறிப் போனார்கள்….
(இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில்)
Comments
Post a Comment