புகையிலை ஒரு அமெரிக்கத் தாவரம். கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த பின்னர் அங்கே படையெடுத்த ஐரோப்பியர்கள், அங்கே இருந்த பூர்வகுடி இந்தியர்கள் புகையிலை பிடிப்பதைக் கண்டு அதைத் தாமும் பிடிக்கத் தொடங்கினர். அதற்குப் பிறகுதான் புகையிலை உலகெங்கும் பயிரிடப்பட்டு, பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், அதனால் ஏற்படும் தீமைகளை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
முதன் முதலாக சிகரெட்டின் தீமைகளை அறிந்த நாடு ஜெர்மனிதான். 1939இல் நாஜி ஜெர்மன் விஞ்ஞானி ப்ரான்ஸ் முல்லர் சிகரெட்டுக்கும் கான்சருக்கும் இருக்கும் தொடர்பைக் கண்டுபிடித்தார். ஆனால், அதை அப்போது மற்ற நாடுகள் ஏற்க மறுத்தன.
"மாஸ்டர் ரேஸ்” எனப்படும் உயர் வகுப்பை உருவாக்கும் கனவில் இருந்த ஹிட்லருக்கு சிகரெட் ஒரு மாபெரும் தீமையாகத் தோன்றியது. ஹிட்லர் சும்மா இருக்காமல் "புகையிலை எதிர்ப்பு மையம்" ஒன்றை அந்தக் காலத்திலேயே தொடங்கினார்.
1940- களிலேயே ஜெர்மனியில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்களுக்குச் சிகரெட் விற்கத் தடை விதிக்கப்பட்டது. ராணுவ வீரர்களும், போலீசாரும் யூனிபாரம் அணிந்து இருக்கையில் புகைக்கத் தடை விதிக்கப்பட்டது. புகையிலை விளம்பரம் தடுக்கப்பட்டது.
உலகில் இது போன்ற கடுமையான தடைகளை இன்னமும் கூட யாராலும் கொண்டுவர முடியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். “Smoking is Injurious to Health” என்கிற விளம்பர வாசகத்தோடு இங்கே அரசின் கடமை முடிந்துவிடுகிறது .....
(இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில்)
Comments
Post a Comment